கொள்கைப் பட்டயம்

‘‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ என்ற கணியன் பூங்குற்றனாரும், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்ற அய்யன் வள்ளுவரும், ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்ற வள்ளலாரும் வாழ்ந்த ‘தமிழ் சுறும் நல்லுலகம்’ தமிழ்நாடு இது.

இந்திய மக்கள் தொகை அடிப்படையில் 6-வது இடத்திலும், இந்தியப் பரப்பளவில் 10-வது மாநிலமாகவும் தமிழ் நாடு உள்ளது. 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது தமிழ் நாடு. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும், தமிழர் வாழும் தமிழ் நாடு, தொன்மையான வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ளபடி, “இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச் சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனையில், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் சகோதரத்துவத்தை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும் சிறுபான்மையினர் உரிமைகள் கட்சி உறுதி பூண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவை 2030-ம் ஆண்டிற்குள் அடையக்கூடிய நீடித்த வளர்ச்சிக்கான, உலகளாவிய இலக்குகள் (Sustainable Development Goals) என்ற தலைப்பில் புதிய திட்டத்தை 2015-ம் ஆண்டில் வெளியிட்டது.

  1. வறுமை ஓழிப்பு

  2. பசி நீக்கம்

  3. நோயற்ற வாழ்வு

  4. தரமான கல்வி

  5. பாலியல் சமத்துவம்

  6. நல்ல குடிநீரும், சுகாதார வசதியும்

  7. மலிவான தூய எரிசக்தி

  8. கௌரவமான வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி

  9. தொழில், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகள்

  10. ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்துதல்

  11. நீடித்து நிலைத்திருக்கும் நகரங்களும், சமூக அமைப்புகளும்

  12. பொறுப்புணர்வு மிக்க உற்பத்தியும் நுகர்வும்

  13. தட்பவெப்ப நிலை செயல்பாடுகள்

  14. நீர் வாழ் உயிரினங்கள்

  15. தரை மேல் வாழும் உயிரினங்கள்

  16. அமைதி, நீதி மற்றும் வலிமைமிக்க நிறுவனங்கள்

  17. இலக்குகளை எய்திட இணைந்து பணியாற்றுதல்

ஐக்கிய நாடுகள் அவை 2030-ம் ஆண்டிற்குள் அடையக்கூடிய நீடித்த வளர்ச்சிக்கான, உலகளாவிய இலக்குகள் (Sustainable Development Goals) என்ற தலைப்பில் புதிய திட்டத்தை 2015-ம் ஆண்டில் வெளியிட்டது.

உலகின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான ஜனநாயகத்தின் பண்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழ் நாடு விளங்க வேண்டும். தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 45% இளைஞர்கள். இவர்களுக்கு முறையான கல்வி, வேலை மற்றும் தொழில் முனைய வாய்ப்பு வழங்கி வளமான தமிழ் நாட்டை உருவாக்குதல்.

கொள்கைகள்:

முகவரி

© 2025