கொள்கைகள்

அரசியல் கொள்கை:
உலகின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான ஜனநாயகத்தின் பண்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழ் நாடு விளங்க வேண்டும்.
  • குடி மக்களின் பங்கேற்பின் அடித்தளமாக உள்ள தேர்தல், நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும்.

  • சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி அமைய வேண்டும்.

  • வெளிப்படைத்தன்மை கொண்ட, ஊழலற்ற நிர்வாகம்.

  • பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் யதார்த்தமான ஊடகச் செயல்பாடு.

  • அரசியல் மற்றும் மதங்களிடையே சகிப்புத்தன்மை பேணுதல் வேண்டும்.

  • கிறிஸ்தவர் உட்பட மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான உரிமைகள் காக்கப்பட வேண்டும்.

  • குடிமைச் சமூகக் குழுக்களின் தீவிர பங்களிப்பு அவசியம்.

  • மக்களாட்சிக்கு எதிரான அதிகாரக் குவிப்பு பரவலாக்கப்பட வேண்டும்.
    அன்பு, அறம் நீதி கொண்ட சமதர்ம தமிழ் நாட்டை உருவாக்கப் பாடுபடுதல்.

சமூகக் கொள்கைகள்:

சாதி, மத, பாலின, பொருளாதார வேறுபாடுகள் இல்லாத ஒரே இனமாக உயர்ந்து நிற்பது சமுதாயக் கொள்கை ஆகும்.
பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள்; கல்வி, மருத்துவம், உணவு, வீடு, வேலை போன்ற பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சமூகத் தீமைகளான மது மற்றும் போதைப் பழக்கங்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து மதுவற்ற, போதைப் பழக்கமில்லாத மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும்.
கல்வி, மருத்துவம் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பொருளியல் கொள்கை:

தென் கொரியா, ஜப்பான் இரு நாடுகளும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி உள்ளன. அது போன்று, தமிழ் நாட்டையும் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக ஆக்க வேண்டும்.
தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 45% இளைஞர்கள். இவர்களுக்கு முறையான கல்வி, வேலை மற்றும் தொழில் முனைய வாய்ப்பு வழங்கி வளமான தமிழ் நாட்டை உருவாக்குதல்.
தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களைத் தொடங்கி, தென் பகுதியையும் வளரச் செய்ய வேண்டும்.
ஆன்லைன் வணிகத்தால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ‘ஆன்லைன்’ வணிகத்திற்குக் கட்டுப்பாடுகள் விதித்து, சிறு வணிகர்களின் வணிகம் பாதிக்கப்படாமல் காக்க வேண்டும்.
தமிழ் நாட்டவர் நடத்தும் சிறு தொழில்கள் மற்றும் கிராமப்புற தொழில்களை வளர்த்தெடுக்கும் வகையில் மானியம் வழங்கியும், பயிற்சி அளித்தும் ஊக்குவித்தல்.

மொழிக் கொள்கை:

தமிழ் நாட்டில் ஆட்சி மொழி, கல்வி மொழி, தொடர்பு மொழி, வழிபாட்டு மொழி, வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருத்தல் வேண்டும் என்பதை, ஒரு காலக் கெடுவை உருவாக்கி, அக்காலக் கெடுவுக்குள் சட்டமாக்க உறுதி செய்ய வேண்டும்.
தமிழக மக்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி முதல், பல்கலைக் கழகக் கல்வி வரை தமிழ் பயிற்று மொழியாகக் கொண்டு, இலவசக் கட்டாயக் கல்வி கொடுக்கப் பட்டியலான நடவடிக்கைகளை உறுதி செய்தல்.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் கலை வடிவங்களை, பிற மொழிகளின் ஆதிக்கத்தில் இருந்து காத்து, நமது மண்ணுக்கேற்ற வகையில் மொழி, பண்பாட்டு மயமாக்குதல் மூலம் நமது தாய் மொழியான தமிழை உலக அரங்கில் மேன்மையுறச் செய்ய உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் முதன் முதலாக நகரம் மற்றும் நாகரீகம் தோன்றிய மாநிலம் என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

சமூக நீதி:

சமத்துவ சமுதாயமே இலக்கு. பிறப்பின் அடிப்படையில் சாதி, பாலினப் பாகுபாட்டையும், பொருளாதார ஏற்றத்தாழ்வையும் ஆதரிக்கும் எந்த அமைப்பும் எதிர்க்கப்பட வேண்டியதே. 1927-ம் ஆண்டு நீதிக் கட்சி ஆட்சியிலிருந்த போது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டத்தை நடைமுறைப் படுத்தியது. அதன் அடிப்படையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.


சாதிய ஆய்வுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்ட நாதன் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளின்படி தமிழ் நாட்டில் இல்லாத சாதிகளின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை அரசுத் துறைகளில் மட்டுமின்றி, தனியார்த் துறைகளிலும் அளிக்க வலியுறுத்த வேண்டும்.
குடும்பத்தைப் பிரிந்து வாழும் திருநங்கையர் பாதுகாப்பாக வாழ்வதற்கு இருப்பிடங்கள் அமைத்துத் தர வேண்டும்.

சுற்றுச்சூழல்:

நீர் மாசுபாடு, நில மாசுபாடு, காற்று மாசுபாடுகளை கண்டிப்பாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
காற்று மற்றும் ஓய்ய ஆற்றலைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்காத வகையில் மின் உற்பத்தி செய்ய வேண்டும்.
பொது போக்குவரத்துச் சேவைகளை அதிகரித்து, காற்று மாசுபாட்டையும், குளிர் வெப்பமயமாக்கலையும் தடுக்க வேண்டும். பழக்கத்து உகந்த மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், கால நிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்கவும், ஐக்கிய நாடுகள் அவையின் பாரீஸ் கால நிலை உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ளவைகளைத் தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு

மீனவர் நலன்:

மீன் பிடி வேலை செய்ய வெளிநாடு செல்லும் மீனவர்களின் உரிமையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
60-வயது நிரம்பிய மீனவர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.2,500 மாதந்தோறும் வழங்க வேண்டும்.
கடல் புற மற்றும் உள் நாட்டு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு நியாயமான விலை கிடைத்திட மீன் வணிக வளாகங்கள் அமைத்துத் தர வேண்டும்.
மீன்பிடித் தடைக்காலங்களின் போதும், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் போதும் அதிகப்படியான உதவிகளைச் செய்ய வேண்டும்.

பெண்கள் நலன்:

தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தனிக்காவல் பிரிவு ஏற்படுத்துவதோடு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய வாய்ப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியவைகளுக்கான ஆய்வுகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்பட்டு, உரிய உயர் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பலவேறு சிக்கல்களில் இருந்து பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட, பணிபுரியும் இடங்களில் சட்டப்படி அமைக்கப்பட்ட வேண்டிய பாதுகாப்புக் குழுக்களை முறையாக அமைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கணவனை இழந்த, கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வுக்கு உரிய பொருளாதாரப் பாதுகாப்பு அளித்து, அவர்களுடைய சூழ்ந்தைகளின் எதிர்காலத்துக்கு உரிய உத்திரவாதம் அளிக்கும் படியான புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

சிறுபான்மையினர் பாதுகாப்பு:

பல்வேறு மொழி, இனம், மதங்களைச் சேர்ந்த மக்களின் தொகுப்பாகிய இந்தியாவின் நிலைத்த தன்மைக்கு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைக் காக்க வேண்டும்.
சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்க இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் பிரிவு 25 வழங்கியுள்ள “மனசாட்சிப்படி செயல்பட மற்றும் தமது மதத்தைத் தழுவ, மேற்கொள்ள, பரப்புவதற்கான சுதந்திரம்’’ காக்கப்பட வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் பிரிவு 30, சமயம் அல்லது மொழி அடிப்படையில், அனைத்துச் சிறுபான்மையினரும் தமது விருப்பப்படி கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தவும், நிர்வகிக்கவும் உரிமையுடையவர்கள் என்று கூறுகின்றது. மத, மொழிச் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அங்கீகாரம், நிதி உதவி வழங்குவதோடு, பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.
மத வேறுபாடு இல்லாமல் கிறிஸ்தவர் உட்பட இனத்தேவர் மற்றும் உக்ரம் பெறப்பட்டோர்க்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கிறிஸ்தவர் உட்பட, சிறுபான்மைச் சமூகத்தவர் தவறான விபரங்களைப் பரப்புவோரை எதிர்த்துப் போராட வேண்டும் மற்றும் எவரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்தவர் மற்றும் சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதக் குருமார்கள் மீது தாக்குதல், மத நூல்களை எரித்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

தொழிலாளர் நலன்:

உலக மயமாக்கலுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால், தகவல் தொழில் நுட்ப (IT) நிறுவனங்கள், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் கிளைகள் நிறைய செயல்பட ஆரம்பித்துள்ளன. இவைகள் தொழிலாளர் நலச் சட்டங்களைப் பின்பற்றுவதில் குறைகள் உள்ளன. இந்திய, தமிழ் நாட்டின் தொழிலாளர் சட்டங்களை மேற்கூறிய நிறுவனங்கள் முழுமையாகக் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான ஜனநாயகத்தின் பண்புகளைக் கொண்ட மாநிலமாக தமிழ் நாடு விளங்க வேண்டும். தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 45% இளைஞர்கள். இவர்களுக்கு முறையான கல்வி, வேலை மற்றும் தொழில் முனைய வாய்ப்பு வழங்கி வளமான தமிழ் நாட்டை உருவாக்குதல்.

கொள்கைகள்:

முகவரி

© 2025